Beauty or Fantasy?
Sunday, December 29, 2013
Beauty or Fantasy?--A poem by R.Natarajan
Beauty or Fantasy?
Posted by Unknown at 12:24 PM 0 comments
Friday, December 27, 2013
Ways of this world-Translation of 194th poem of "Puranaanooru" by R.Natarajan
Posted by Unknown at 8:05 PM 3 comments
Tuesday, December 24, 2013
Message from the manger (or) Christmas Tidings-A poem by R.Natarajan
Posted by Unknown at 6:55 PM 1 comments
Wednesday, December 11, 2013
உயிர் பெற்ற உயிர் எழுத்துக்கள் -A poem by R. Natarajan-
(ஆங்கிலத்தில் Spike Milligan என்ற கவிஞர் எழுதிய ' THE ABC " என்ற
கவிதையை ப் படித்தவுடன் தோன்றிய உந்துதலில் பிறந்த படைப்பு இது )
Posted by Unknown at 9:51 PM 1 comments
Wednesday, December 4, 2013
"கொடுப்பதே மகிழ்ச்சி "--A poem by R.Natarajan
" கொடுப்பதே மகிழ்ச்சி "
Posted by Unknown at 9:57 PM 0 comments
Sunday, December 1, 2013
"செந்தமிழ் வேல்முருகா "--தமிழிசைப்பாடல் -By R.Natarajan
(இசை விழா -2013 தொடங்கி விட்டது .இதோ எனது பங்களிப்பாக ஓர்
இசைத்தமிழ்ப் பாடல் ..)
ராகம் : காபி தாளம் : ஆதி
செந்தமிழ் வேல்முருகா --உலாவிடும்
தோகை மயிலழகா
வந்திடும் அடியவர் வல்வினை களைவாய்
வரங்களைப் பொழிந்திடுவாய் (செந்தமிழ் )
கார்த்திகைப் பெண்களவர் --மடியில்
களிப்புடன் தவழ்ந்தவனே
ஈர்த்திடும் இன்பத் தாலாட்டுப் பாட
என்ன தவம் செய்தனரோ --அவர்
என்ன தவம் செய்தனரோ (செந்தமிழ் )
வம்புக்கு வள்ளியை அழைத்தவனே --உடல்
வாடிய கிழம் போல் பழுத்தவனே
நம்பிக்கை கொண்டே நாள்தோறும் வேண்டி
நாடுபவர்க் கருள் செய்பவனே --உனை
நாடுபவரக் கருள் செய்பவனே (செந்தமிழ் )
Posted by Unknown at 3:49 PM 0 comments
Sunday, November 17, 2013
Wednesday, October 30, 2013
HELLO HALLOWEEN-A poem by R .Natarajan
Hello, hello Halloween
Fun and frolic,you have been.
Eerie stories doing rounds
Shades of candles forming hounds.
Jack-o" lanterns grin and flicker
Incense"s smoke become thicker
Bizarre hats, grotesque masks,
Painted faces,pranky tasks,
Ghastly ghosts,gruesome goblins,
Glowing bonfires,-revelry dins.
Sinister dogs, spooky cats,
Hooting owls, fluttering bats--
These and many more, Halloween make
The souls of dead-- for their sake!
Posted by Unknown at 4:56 PM 1 comments
Thursday, October 24, 2013
"SUN"--Prose-poem of Subramania Bharathi (Tranlated from Tamil by R.Natarajan)
SUN
You are flame;
You are explication;
You are that which is seen
Ruby,
Posted by Unknown at 9:17 PM 0 comments
Monday, October 14, 2013
DREAM AND LIFE--A Poem by R.Natarajan
DREAM AND LIFE
Posted by Unknown at 4:02 PM 0 comments
Thursday, October 10, 2013
A TRIBUTE TO SACHIN---By R.Natarajan
Posted by Unknown at 7:22 PM 0 comments
Wednesday, October 9, 2013
காலத்தை வெல்லும் --கொலு பற்றிய சிறுவர் பாடல் --By R.Natarajan
காலத்தை வெல்லும்
(கொலு பற்றிய சிறுவர் பாடல் )
Posted by Unknown at 8:44 PM 2 comments
Thursday, October 3, 2013
கொசு --A poem by R.Natarajan
கொசு
Posted by Unknown at 9:23 PM 2 comments
Sunday, September 8, 2013
"நீ ..."-வாழ்க்கைத் தத்துவப் பாடல் --By R.Natarajan
" நீ "
Posted by Unknown at 11:38 AM 1 comments
Sunday, September 1, 2013
Tuesday, August 27, 2013
THY GRACE I WANT--a poem on Lord Krishna-By R.Natarajan
Rain bearing dark cloud Ye resemble
Peacocks dance around in ensemble.
Music from Thy flute floats on airy ways
Entranced cows forget even to graze.
Hearts of Gopis ,hearing Thy name soon
Melt down like the soft butter they churn.
Alas, my heart alone fails to chant
Thy holy name. Krishna--Thy grace I want!
(This is is a translation of my song on Lord Krishna in Tamil ,written some time ago. )
Posted by Unknown at 9:07 PM 1 comments
Sunday, July 21, 2013
CUP OF JOY--A Poem by R.Natarajan
cup of joy
As one raga softly and subtly slide
Into another on a harmonious tide.
Posted by Unknown at 11:26 AM 2 comments
Tuesday, June 25, 2013
விடுமாற்றமும் ,நிலைமாற்றமும் (இலக்கியத் துளி) ----By R.Natarajan
அது ஒரு பெரிய அரண்மனை ---ஓங்கி உயர்ந்த மாடங்களைக் கொண்டது .பகைவர் பலரை வென்று வாகை சூடிய மாபெரும் வீரனான அரசன் ஒருவன் தன் குடும்பத்தினருடன் அரண்மனை மேன்மாடத்தில் வசித்து வந்தான் .வெற்றிக் களிப்பும் ,செல்வச் செழிப்பும் ,ஆட்சிச் சிறப்பும் நிறைந்த அந்த இடத்தில் கேளிக்கைகளுக்கும் ,கொண்டாட்டங்களுக்கும் குறைவே இல்லை .எப்படிப்பட்ட சுகபோக வாழ்க்கை !
ஆனால் ....இதெல்லாம் இப்போது பழைய கதை .உல்லாசமும் ,கோலாகலமும் உலா வந்த அந்த உயர் மாடத்தில் இன்று யாரும் இல்லை .அதாவது மனிதர்கள் யாரும் இல்லை .மனித நடமாட்டமே இல்லாத அந்த அரண்மனையின் மேன்மாடத்தில் பேய்களும் ,கோட்டான்களும் குடியேறி விட்டன .
இந்த அவல நிலைக்குக் காரணம் என்ன தெரியுமா ?
தென்னவனாகிய பாண்டியன் சொல்லி அனுப்பிய சொல்லுக்கு அந்த அரசன் அடிபணிய மறுத்தான் .அவன் அனுப்பிய ஓலையை ஏற்காமல் புறக்கணித்தான் ,சீற்றம் கொண்ட பாண்டியன் செரு முனையில் அவனைக் கொன்று ,அவனைச் சேர்ந்தோரையும் அடியோடு அழித்தொழித்தான் . அதனால் இப்போது அவ்வரசனின் அரண்மனை மாடத்தில் பேய்கள் குடியிருக்கின்றன ; கோட்டான்கள் கூக்குரல் இடுகின்றன .
போர்க்களத்தில் வயிறு முட்டப் பிணம் தின்றதால் தூக்கம் வராமல் படுத்துப் புரண்டுக் கொண்டிருக்கும் பேய்களை உறங்க வைக்கக் கோட்டான்கள் தாலாட்டுப் பாடுவதைப் போன்றல்லவோ இது தோன்றுகிறது !
அரச குடியினர் வாழ்ந்த இடத்தில் இப்போது பேய்கள் ஓய்வெடுக்கின்றன ..மகிழ்ச்சி ஆரவாரம் கேட்ட இடத்தில் கோட்டான்கள் அலறுகின்றன .தென்னன் விடுமாற்றம் (அனுப்பிய ஓலையை ) கொள்ளாததால் இந்த நிலைமாற்றம் !
அந்தோ ! இரக்கத்தால் நெஞ்சம் நெகிழ்கிறது ! ஆனால் ,பாடலின் சொல்லழகாலும் ,பொருளழகாலும் நெஞ்சம் மகிழ்கிறது ! நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் ஒருசேர விளைவிக்கும் நிகரில்லா முத்தொள்ளாயிரப் பாடல் இதோ :
" வாகை வனமாலை சூடி அரசுறையும்
ஓகை உயர் மாடத் துள்ளிருந்து ----கூகை
படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன்
விடுமாற்றம் கொள்ளாதார் நாடு ! "
Posted by Unknown at 9:19 PM 0 comments
Monday, June 24, 2013
யாது நீ எழுதவில்லை --A tribute to Kannadasan-By R.Natarajan
கண்ணனின் தாசன் தானோ !
கவிதையின் நேசன் தானோ !
மண்ணிலே உள்ள யாவும்
வார்த்தையில் கொண்டு வந்தாய் !
விண்ணிலே தேவர் பாட
வியத்தகு மெட்டில் நல்ல
பண்ணிலே பலவாம் பாடல்
படைக்கவோ சென்றாய் கூறு ?
காதலும் இருக்கும் காந்தக்
கவிதையும் இருக்கும் , எண்ண
மோதலும் இருக்கும் ,நெஞ்சம்
முழுவதும் நிறைந்து நிற்கும்
தாதவிழ் பூவைப் போன்று
தத்துவ மணம்சி றக்கும் .
யாதுநீ எழுத வில்லை ?
இன்றமிழ்ப் பெற்ற பிள்ளை !
Posted by Unknown at 9:48 PM 3 comments
காளமேகம் கவித்திறன்
(விகடன் 2005 தீபாவளி மலரில் வெளிவந்த என் கட்டுரை )
\
பொறாமை என்பது புலவர்களின் பூர்விகச் சொத்து என்று சொல்வதுண்டு இதனால் ஒரு நன்மையும் உண்டு .போட்டியில் தான் பல அற்புதமான பாடல்கள் படைக்கப்படுகின்றன
காளமேகப் புலவருக்கும் திருமலைராயனின் அரசவைப் புலவர்களுக்கும் ஏற்பட்ட போட்டியில் , தமிழ் இலக்கியத்துக்குப் பல வேடிக்கையான ,மாறுபட்ட பாடல்கள் கிடைத்துள்ளன .
அரசவைப் புலவர்கள் வேண்டுமென்றே கொடுத்த விபரீதமான குறிப்புகளுக்குத் தக்கவாறு ,யாவரும் வியக்குமாறு பாடினார் காளமேகம் .
ஒரு புலவர் "செருப்பு " எனத் தொடங்கி , " விளக்குமாறு " என்று முடியும் வகையில் வெண்பா ஒன்றைப் பாடுமாறு சொன்னார் . விடுவாரா காளமேகம் ?
'
"செருப்புக்கு " என்பதை 'செரு + புக்கு '( 'போர்க்களம் புகுந்து ') என்றும் ,'விளக்குமாறு ' என்பதை 'விளக்கும் + ஆறு '( 'விளக்கமாகச் சொல்லும் வழி) என்றும் அமைத்து அசத்தி விட்டார் .
" செருப்புக்கு வீரரைச் சென்றுஉழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல --மருப்புக்கு
தண்தேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்கு மாறே !"
'போரில் எதிரிப்படை வீரர்களைத் துன்பப்படுத்தும் , மலைக்குத் தலைவனான வேலேந்திய முருகனை நான் அடைய , தாமரையில் இருக்கும் வண்டே .... நீ வழி காட்டு ' என்று தலைவியின் கூற்றாக அமைந்த அழகிய பாடல் இது !
Posted by Unknown at 8:56 PM 1 comments
Sunday, June 23, 2013
மூன்றுமுறை" உண்ட"மூதாட்டி!
(இலக்கியம் என்பது ,மனித வாழ்வின் மகத்தானதொரு பரிமாணம் ஆகும் .மனிதன் நினைப்பது, பேசுவது ,எழுதுவது --அனைத்துமே இலக்கியத்தை உருவாக்குகின்றன .
அது புலவர்களின் பரம்பரைச் சொத்து என்றும் ,அறிவு ஜீவிகளின் ஆஸ்தி என்றும் ,மேதைகளுக்கு மட்டுமே உரிய மேலான விஷயம் என்றும் தவறாகக் கருதப்பட்டு விட்டது .
இலக்கியத்தின் இயல்பான இனிமையை நீங்கள் ரசிக்க ....ருசிக்க ... இதோ ஓர் இலக்கியத் துளி !)
------------------------
ஒரு முறை பாண்டியன் வீட்டுத் திருமண விருந்தில் ஏகப்பட்ட கூட்டம் பந்திக்கு முந்திக் கொண்டு பாய்ந்து சென்றவர்கள் , ஒரு பாட்டியைக் கீழே தள்ளி விட்டனர் .அவர் ---தமிழ்ப் பாட்டி ஔவை.
ஓர் ஓரத்தில் சென்று அமர்ந்தார் ஔவை .அப்போது அந்தப் பக்கம் வந்த பாண்டிய அரசன் ,அவரிடம் " அம்மையே ,உண்டீர்களா ? விருந்து சுவையாக இருந்ததா ? " என்று அன்புடன் விசாரித்தான் .
எரிச்சலை அடக்கிக் கொண்ட ஔவை , " உண்டேன் ,உண்டேன், உண்டேன்... ஆனால் சோறு மட்டும் உண்ணவில்லை .!" என்று அமைதியாக உரைத்தார் .
விழித்தான் வேந்தன் . விளக்கிச் சொல்லுமாறு வேண்டினான் .
ஔவையார் சொன்னார் : "கூட்டத்திலே நெருக்குண்டேன் ; கீழே தள்ளுண்டேன் ; பசி மிகுதியால் வயிறு சுருக்குண்டேன் ....சோறு மட்டும் உண்ணவில்லை !"
இந்தப் பொருள் வரும்படி ஔவைப் பாட்டி பாடிய பாட்டு இதோ :
"வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் -- அண்டி
நெருக்குண்டேன் ,தள்ளுண்டேன் ,நீள்பசியி னாலே
சுருக்குண்டேன் ...சோறுகண்டி லேன் ! "
பாட்டைக் கேட்ட பாண்டியன் ,தன் கையால் அவருக்கு விருந்தளித்துப் பெருமைப் படுத்தினான் .
Posted by Unknown at 8:55 PM 5 comments
Sunday, June 16, 2013
எந்தையே வா
எந்தையே வா
Posted by Unknown at 3:17 PM 3 comments
Sunday, May 26, 2013
பெண் குழந்தையின் புலம்பல் ---A poem by R.Natarajan
பெண் குழந்தையின் புலம்பல்
'கட்டிய மணல் வீட்டைக் காலால் சிதைத்தவனைத்
தட்டிக் கேள் ' என்று தந்தையிடம் சொன்னால்
'சுட்டிப் பையன் ' என்று தோள் தூக்கிக் கொஞ்சுவதேன்?
'ஆண்சிங்கம் ' என்றும் 'ஆளப் பிறந்தவன்' என்றும்
'பெட்டைக் கழுதை' என்றும் பேசுவதும் ஏன்தானோ ?
தம்பி அழுவானாம் --தர வேண்டும் பொம்மைகளை .
அண்ணன் அடிப்பானாம் ---அத்தனையும் தர வேண்டும் .
அழுகைக்கும் ,அடிகளுக்கும் நான்தானா அகப்பட்டேன் ?
விட்டுக் கொடுப்பது பெண்ணுக்கு அழகென்று
தட்டி அவர் பறித்திடவே தவறான வழிவகுப்பார் .
புதுப் பாவாடை எனக்குண்டு --புடைவை கிழிந்துவிட்டால் .
சிக்கனம் என்பதை எனக்குக் கற்பிப்பார்
அக்கணம் அதைமறப்பார் அவர்களுக்கு வாங்குகையில் .
'பெண்ணுக்குச் செல்லம் கூடாது -பெருந்தீங்கு 'என்று
புண்ணுக்குள் கோல் விடுதல் போன்று கூறிடுவார் .
அண்ணன் ,தம்பி இருவர் இருக்கையிலே , இந்தப்
பெண்ணுக்குப் பரிந்து பேசிட யாருண்டு ???
Posted by Unknown at 3:24 PM 2 comments
Thursday, February 21, 2013
Chemmmozhiye--Verses on Tamil by R.Natarajan
செம்மொழியே !
Posted by Unknown at 12:04 PM 3 comments
Sunday, January 27, 2013
THE WORLD HAS SHRUNK-A Poem by R.Natarajan
THE WORLD HAS SHRUNK
Posted by Unknown at 10:55 AM 3 comments