BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, December 29, 2013

Beauty or Fantasy?--A poem by R.Natarajan

   
    Beauty or Fantasy?

She wore a golden yellow saree
With border of a reddish hue.
Rembrandt's portrait straight from gallery ?
Angelo's sculpture turning true?

She drifted like a ballet dancer
Smiling as a morning flower.
The sharp two eyes made her a lancer
Fighting for her beauty's power.

Her sigh was music,speech was sweet song.
Looks were hooks fishing out young hearts.
Her tresses long formed a cloudy throng.
Waist,a bow sending Cupid's darts.

She came,vanquished,vanished very soon.
No maiden of this earth was she.
Was she an angel or heaven's boon,
Or my day-dream or fantasy?

Friday, December 27, 2013

Ways of this world-Translation of 194th poem of "Puranaanooru" by R.Natarajan


     Ways of this world

(This is a translation of 194th poem of "Puranaanooru"(oril Neithal Karanga),an ancient Tamil Classic,of the sangam era,about 2000 years ago)


Loudly beats the funeral drum and
laments at one house.
Soft music surges from the wedlock drum
at another place.
The nuptial bride decks herself with
delightful ornamental flowers.
And the eyes of the bereaved
bemoan with tearful showers.
Verily, the Creator is of
unfeeling disposition.
Miserable, of course, are the 
ways of this world.
Discern and discover in it
definite means to
sweetness unfold! 


         Translated from Tamil by R.Natarajan

Tuesday, December 24, 2013

Message from the manger (or) Christmas Tidings-A poem by R.Natarajan










      Message from the manger




To Bethlehem went some men
Reached stable and saw God's Son.
In a manger lying there
"What's this ," they yelled,"It's not fair.
When we're here how can he sleep
In a shed with no upkeep"

With proud devotion they told,
"Darling baby,it is cold.
Don't you cry,here we come.
Gifts we bring rich and awesome.
Freshly baked cakes,pastries sweet,
Fruits of all kinds good to eat.
Almonds,cashews fit for kings.
Also finely made play things."

"Hear me ere you speak a word",
The infant smiled and then told:
"I've come to give -not to take.
Folks around you happy make.
Do not bring me gifts or gold.
Care for poor,sick and old.
Air is chill,let hearts be warm.
That's the sign of festive charm.
Go to men and serve them right
I"l lead with kindness and light""

Message from the manger will
Make our Christmas sweeter still.

Wednesday, December 11, 2013

உயிர் பெற்ற உயிர் எழுத்துக்கள் -A poem by R. Natarajan-

                                      உயிர் பெற்ற உயிர் எழுத்துக்கள்

(ஆங்கிலத்தில் Spike Milligan என்ற கவிஞர் எழுதிய ' THE ABC " என்ற
 கவிதையை ப் படித்தவுடன்  தோன்றிய உந்துதலில் பிறந்த படைப்பு இது )

விடுமுறை நாளில் விடுதலை கிடைத்ததால் 
ஏட்டை விட்டே எகிறி வெளியே 
உலவச் சென்றனர் உயிரெழுத் தனைவரும்
ஆய்தமும் அட்டைபோல் ஒட்டிக் கொண்டான் .

வேலை இன்றேல் வீண்குழப்பம்   தானே.
அடுத்தவன் தலையில் அழுத்தி" அ"  குட்டினான் .
" ஆ" என  அவனும் அலறித் துடித்தான் .
அடிக்கு அஞ்சி அங்கம் சுருட்டினான்" இ".
ஈ என இளித்திட்டு என்மேல் இரங்கிடு --
நான்காம் நபரோ நடுங்கிச் சொன்னான் .

உ என்றும் ஊ ஊ  என்றும் ஊளையிட்டுத் 
தப்ப எண்ணினர் அடுத்தவர் இருவரும் .
எனைப்போல் நேராய் நிமிர்ந்து நின்றால் 
எப்படி அடிப்பான்  என்றான்" எ"  ஏ ஏ 
வேண்டாம் வம்பு விலகிவா என்றான் ஏ   

"ஐ"யோ  ஐயோ என்று கத்தினான் 
"ஒ "வும் "ஓ "வும்  உள்ளம் கலங்கி 
"ஔ"விடம்  முறையிட அவனும் சொன்னான் :
என்னைப் போல துணையுடன் வந்தால் 
அச்சம் உண்டோ அறிந்து கொள்வீர் .


எஃகு  நெஞ்சத்து ஆய்தம் "ஃ" உரைத்தான் :
அடிப்பவன் அலறிட ஆயுதம் எடுப்போம் 
தடிப்பயல் தானே தணிந்து போவான் .

ஆயுதம் என்றதும் அசட்டுச் சிரிப்புடன் "அ"
விளையாடிப் பார்த்தேன் வினையாய் மாறியது 
வீட்டுக்குப் போகலாம் வருந்துகிறேன் என்றான் 

கூட்டுக்குத் திரும்பும் பறவைகள் போன்றே 
ஏட்டுக்குள் நுழைந்தனர் -இனிதே உறங்கினர் . 

Wednesday, December 4, 2013

"கொடுப்பதே மகிழ்ச்சி "--A poem by R.Natarajan




               "   கொடுப்பதே மகிழ்ச்சி " 


'கொடுப்பதில் மகிழ்வடையும் வாரம்'  பள்ளிகளில் கொண்டாடப் பட வேண்டும் என்ற பள்ளிக்கல்வித் துறையின் உத்தரவு பற்றிய செய்தி (தினமணி -29 செப் ) மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது .

குறுகிய நோக்கமும் ,தன்னலப் போக்கும் ,அனைத்தையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற பேராசையும் பெருகியுள்ள இந்நாளில் இப்படிப்பட்ட ஒரு புதிய அணுகுமுறை பற்றிப் படித்த உடனே உள்ளம் துள்ளிக் களித்தது . அந்தக் களிப்பிலே கனிந்த ஒரு கவிதையைப்  பகிர்ந்து கொள்ள விழைகின்றேன் :


ஆறளிக்கும் தண்புனலை  ; விண்ணில் தோன்றும் 
         ஆதவனும் ஒளியோடு தருவான் வெப்பம் .
சேறளிக்கும் தாமரைப்பூ ;  மரங்கள் யாவும் 
         தித்திக்கும்  கனிதந்து நிழல் கொடுக்கும் 
மாறிலாது  மழையளிக்கும் முகிலின் கூட்டம் ;
          வள்ளல்பசு பால்சுரக்கும் . இயற்கை அன்னை 
ஈறிலாது வழங்குகின்ற கொடையே வாழ்க்கை !
          ஈத்துவக்கும் இன்பத்தைப் பெறுவோம் நாமும் !

Sunday, December 1, 2013

"செந்தமிழ் வேல்முருகா "--தமிழிசைப்பாடல் -By R.Natarajan

                                               







                                   "செந்தமிழ் வேல்முருகா "--தமிழிசைப்பாடல்
(இசை விழா -2013 தொடங்கி விட்டது .இதோ எனது பங்களிப்பாக ஓர்
  இசைத்தமிழ்ப் பாடல் ..)

     ராகம் : காபி                                                                                                         தாளம் : ஆதி


                                 செந்தமிழ் வேல்முருகா --உலாவிடும்
                                      தோகை மயிலழகா
                                  வந்திடும் அடியவர் வல்வினை  களைவாய்
                                       வரங்களைப் பொழிந்திடுவாய்                                (செந்தமிழ் )

                                                       

                               
                                கார்த்திகைப் பெண்களவர் --மடியில்
                                        களிப்புடன்  தவழ்ந்தவனே
                                ஈர்த்திடும் இன்பத் தாலாட்டுப்  பாட
                                         என்ன தவம் செய்தனரோ --அவர்
                                         என்ன தவம் செய்தனரோ                                      (செந்தமிழ் )


                              வம்புக்கு வள்ளியை அழைத்தவனே --உடல்
                                        வாடிய  கிழம் போல் பழுத்தவனே
                              நம்பிக்கை கொண்டே நாள்தோறும் வேண்டி
                                        நாடுபவர்க் கருள்  செய்பவனே --உனை
                                        நாடுபவரக் கருள்   செய்பவனே                           (செந்தமிழ் )