மூண்டெழுந்த தாண்டவம் !
கீண்டநிலாத் துண்டாடப் புனல்கங்கை விரைந்தாடக்
கிளர்மாலை வண்டாடச் சீர்தாளம் துடிபோட,
நீண்டசடை சுழன்றாட, நெளியரவம் வளைந்தாட,
நெருப்பாடப் பொருப்பாடக் கழல்கடகம் நெகிழ்ந்தாட ,
மூண்டெழுந்த தாண்டவத்தால் மூவுலகும் திண்டாட ,
முற்றுமறி ஞானியர்கள் பரவசத்தால் பண்பாட,
ஈண்டுனது திருநடனம் இருகண்கள் கண்டபின்னர்
இன்னுமொரு முறைபிறக்க வேண்டுமோ நான்
ஆண்டவனே !!!

0 comments:
Post a Comment