" வேட்கை முதிர்ந்த மனமே "
("பிரேம முதித" என்ற பஜனைப் பாடலைத் தமிழில் தர முயன்றுள்ளேன் .சாயி அன்பர்கள் பாடி மகிழ்வார்களாக !)
வேட்கை முதிர்ந்த மனமே சொல்லு ராம ராம ராம் ,
ராம ராம ராம் ,
ராம ராம ராம்,சாயி ராம ராம ராம்
பாவங்களைத் துன்பங்களைப் போக்கும் சாயி ராம்
துயர்கடலைக் கடக்கும் நல்ல தோணி சாயி ராம்
(ராம ராம )
மிகுந்த இன்பம் அமைதி நல்கும் ஞானி சாயி ராம்
தகுந்த துணை அற்றவர்க்குப் பற்றுக் கோடவன்
(ராம ராம )
மறைபொருளாம் தூய மந்திரம் சாயி ராம ராம ராம்
நிறை அமைதி உளத்தில் உளன் சாயி ராமனே
(ராம ராம )
அன்னை தந்தை சுற்றம் நட்பு யாவும் சாயி ராம்
பொன்னும் பொருளும் நமக்குப் புவியில் சாயி நாமமே
(ராம ராம )
0 comments:
Post a Comment