ஹைக்கூ
உடைந்த சிலம்புடன்
நியாயம் கேட்டாள் --
வாங்கிய கடையில் ! 1
சாதியின் காலை
ஒடித்தால் தெரியும் --
சதி ! 2
காலைக் கடித்தது
மேல்நாட்டுச் செருப்பு ---
முதலைத் தோல் ! 3
வழுக்கைத் தலை
பல் இல்லாத சீப்பு --
உறவின் முறை ! 4
காலக் கிடங்கில்
கடைசியில் எஞ்சியது ---
நினைவு ! 5
கண்மூடிக் கருத்தும் மூடி
உள்நோக்கி ஒருபயணம் -
தவம் ! 6
எல்லாம் நானே
என்னுள் எல்லாம் --
இறைமை ! 7
2 comments:
SUPERB SUPERB....
Swathi
liked the 3rd one the most..super :)
Post a Comment