. ஹைக்கூ
அன்னையும் தந்தையும்
முன்னறி தெய்வம் --
ஒளவைக்கு 1
வரிகளை மறைத்து
ஏய்க்க நினைத்தார் ---
பொருளாதாரப் புலி
மரம் நட்டனர்
குளமும் வெட்டினர் ---
வரலாற்றுப் பாடத்தில் 3
தள்ளு வண்டியில்
கறிகாய் விற்கும் --
தள்ளாத கிழவர் 4
கருங்கல் இதயம்
கண்களில் நீர் ---
ஊற்று 5
உறங்கும் போதும்
உலகம் சுற்றினேன் ---
கனவு 6
ஊர்கூடி இழுத்தும்
நிலைக்கு வரவில்லை ---
தேர்(தல்) 7
பேரனைப் பள்ளியில்விடப்
பெரியவர் போகிறார் ---
பணி ஒய்வு 8
வயிற்றில் நெருப்பு
வாழ்வின் துடுப்பு ---
பசி 9
2 comments:
I liked 1 3 4 6 8 the best uncle!!
Post a Comment