மனித நேயத்தைத் துதிப்போம் !
உதித்திடும் கதிரும் உலவிடும் காற்றும்
உயரத்தில் இருந்தே பொழிந்திடும் மழையும்
மதத்திற் கேற்பவே கொடுப்பதும் இல்லை
மனிதனைப் பிரித்துக் கெடுப்பதும் இல்லை
மதத்திற் கேற்பவே உருவத்தை மாற்றி
மனிதனைக் கடவுள் படைப்பதும் இல்லை
சிதைத்திடும் பிரிவுகள் யாவும்நம் செய்கை
சேர்த்துவைப்பதே மதங்களின் கொள்கை
தெய்வம் தொழுவதில் சண்டைகள் எதற்கு ?
சண்டைகள் உண்டெனில் தெய்வம்ஏன் அதற்கு ?
கைகளை இணைப்போம் , கடவுளை நினைப்போம்
கலவர எண்ணங்கள் யாவையும் மறப்போம் .
சேற்றில் இறங்கியே குளித்திட லாமா ?
சிந்தையில் வெறுப்புடன் வணங்கிட லாமா ?
மாற்று மதங்களை மதித்திட வேண்டும் ;
மனித நேயத்தைத் துதித்திட வேண்டும் !!!
உதித்திடும் கதிரும் உலவிடும் காற்றும்
உயரத்தில் இருந்தே பொழிந்திடும் மழையும்
மதத்திற் கேற்பவே கொடுப்பதும் இல்லை
மனிதனைப் பிரித்துக் கெடுப்பதும் இல்லை
மதத்திற் கேற்பவே உருவத்தை மாற்றி
மனிதனைக் கடவுள் படைப்பதும் இல்லை
சிதைத்திடும் பிரிவுகள் யாவும்நம் செய்கை
சேர்த்துவைப்பதே மதங்களின் கொள்கை
தெய்வம் தொழுவதில் சண்டைகள் எதற்கு ?
சண்டைகள் உண்டெனில் தெய்வம்ஏன் அதற்கு ?
கைகளை இணைப்போம் , கடவுளை நினைப்போம்
கலவர எண்ணங்கள் யாவையும் மறப்போம் .
சேற்றில் இறங்கியே குளித்திட லாமா ?
சிந்தையில் வெறுப்புடன் வணங்கிட லாமா ?
மாற்று மதங்களை மதித்திட வேண்டும் ;
மனித நேயத்தைத் துதித்திட வேண்டும் !!!
0 comments:
Post a Comment