BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Wednesday, October 17, 2012

THAAYE EN THAAYE- A song on Goddess Durga-By R.Natarajan

                  

         தாயே என் தாயே 

    (மெட்டு :" பூவே செம்பூவே "-திரைப்படப்பாடல் )

தாயே என் தாயே உன் கோயில் வந்தேன் 
நீயே எந்நாளும் என் நீங்காத் துணை 

(சேய் கூறிடும் எல்லாக் குறை 
 நீதான் இனிப் போக்கும் இறை )                                               (தாயே )



தழல் போல வானில் ..........ஆ ............................................(2)
விரைந் தோடும்  கோளும் 
சுழல்கின்ற உன்றன் சுடராழி  அன்றோ 
முடியாத வானில் நெளிந்தாடும் மீன்கள் 
நெடிதான மாலை வைரங்க ளாகும்
மேன்மேலும்  உன்னை நான்பாடு வேனே 
தேன் மேவும்  பூப்போல் மலராதோ வாழ்வே 
உன்னாலே என்வாழ்வு பொன்னா குமே                      (சேய் )
                                                                                                                (தாயே )



மனம் போன போக்கில் சிறுபிள்ளை போலே 
தினம் போக  நெஞ்சம் விழைகின்ற  தேனோ 
எனைப் போல வாழும் பலபேரும் உண்மைக் 
கதி எண்ணித் தேர்ந்தால் தழைத்தோங்கும் நன்மை .
வாழ்கின்ற வாழ்க்கை இசையாக மாறும் 
மாறாத வாழ்த்தே சேராதோ என்றும் .
உன்னாலே என்வாழ்வு பொன்னா குமே                        (சேய் )
                                                                                                                  (தாயே ) 

4 comments:

Unknown said...

hi sir,hope u and lalitha madam are fine....very nice poem......eagerly waiting for one poem from u about Saraswathi devi......dhanusha

Unknown said...

hi sir,hope u and lalitha madam are fine....very nice poem......eagerly waiting for one poem from u about Saraswathi devi......dhanusha

Unknown said...

hi sir,hope u and lalitha madam are fine....very nice poem......eagerly waiting for one poem from u about Saraswathi devi......dhanusha

Unknown said...

Very nice poem.......ive read it with the tune....its sounds good with that tune.That too மேன்மேலும் உன்னை நான்பாடு வேனே
தேன் மேவும் பூப்போல் மலராதோ வாழ்வே
உன்னாலே என்வாழ்வு பொன்னா குமே is very good lines sir.I liked it so much...Happy Ayudha pooja to u and lalitha madam........dhanusha