வெற்றியே !
இசையுடன் கல்வியும் இயல்புடன் சிறந்திடும்
இணையிலா ஆற்றலும் ஞானமும் வந்திடும்
அசைவறு மதியுடன் மகிழ்ச்சியும் முந்திடும்
அன்னையாம் நாமகள் அருள் இவை தந்திடும்
பாட்டினில் இனிமையும் பொருளுமாய் ஆனவள்
பல்கலைப் பயிர்வளர் நன்மழை தானவள்
ஏட்டினில் எழுத்தவள் ,இயம்பிடும் சொல்லவள்,
எண்ணமும் ஆகியே இயக்கிடும் நல்லவள்
ஆடுவோம் பாடுவோம் கலைகளை நாடுவோம்
அருமறை கூறிடும் உட்பொருள் தேடுவோம்
பீடுயர் கலைமகள் திருவடி பற்றியே
பிழையறு நெறியினில் சென்றிடில் வெற்றியே
3 comments:
Thank You Sir.....Very nice poem......dhanusha
Thank You Sir.....Very nice poem......dhanusha
Thank You Sir.....Very nice poem......dhanusha
Post a Comment