சாரணர் நாம் !
சாரணர் நாம் ,சாரணர் நாம் !
சாதனை படைத்திடும் சாரணர் நாம் !
(சாரணர் )
(சாரணர் )
உற்றவர் அனைவர்க்கும் உதவிகள் செய்வோம்
உயர்வுடன் நண்பராய்ப் பழகியே உய்வோம்
பற்றுடன் பாசமும் பரிவுமே கொள்வோம்
பண்பினால் துணிவினால் பாரினை வெல்வோம்
(சாரணர் )
(சாரணர் )
சிக்கனம் மற்றும் சிந்தையில் கனிவு
செயலிலும் சொல்லிலும் தூய்மையின் தெளிவு
மக்களின் மதிப்பைப் பெற்றிடும் நடத்தை
மகிழ்வுடன் பதிப்பமே சாரணர் தடத்தை
(சாரணர் )
(சாரணர் )
(Written at the behest of my daughter Gayathri (who was an active participant in the Guides movement at school) on17-03-2002 )
0 comments:
Post a Comment