BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Friday, March 23, 2012

VINDHAIYAANA VIRPANAI




விந்தையான விற்பனை !

ஆயர் குலப் பெண்ணொருத்தி --கண்ணன் மேல் ஆழ்ந்த அன்பு கொண்டவள் !
எண்ணம் எல்லாம் எப்பொழுதும் அந்தக் கண்ணனையே சுற்றிச் சுற்றி வரும்.
ஒருநாள் வெண்ணெய்,தயிர் நெய் ஆகியவற்றைச் சுமந்து கொண்டு விற்றுவரக் கிளம்புகிறாள். .

'வெண்ணெய் , தயிர், நெய் ' என்று குரலெடுத்துக் கூவ வேண்டியவள் , கண்ணனையே நினைத்திருந்த காரணத்தால் தனைமறந்த நிலையில் "கோவிந்தன் ,தாமோதரன்,மாதவன் " என்று கூவுகிறாள்.

என்ன ஓர் அழகான கற்பனை !

இக்காட்சி லீலா சுகரின் கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் வருகிறது
 .
இதனைத் தமிழில் பாடலாக வடித்துள்ளேன் :




வெண்ணெயுடன் தயிரதுவும் நெய்யும் கொண்டு 
விற்றுவரக் கிளம்பினளே ஆயர் மங்கை 
எண்ணமெலாம் எப்பொழுதும் கண்ணன் மேலே 
இருந்ததனால் பொருள்கூறி விற்கும் போது
'புண்ணியம்செய் தாயரே நீர் வாங்கு வீரே
புயல்வண்ணன் ,கோபாலன் ,எம்கோ விந்தன்
நண்ணிவந்தேன் உங்களையே ' என்று கூவ
நகைத்தனர்பின் வியந்தனரே ஊர்வாழ் மக்கள் ! 



4 comments:

RMK said...

Highly Impressive Translation.Virpanai Arummai.Paadal
Arputham.As Lord Macaulay said,I woke up oneday and found myself famous--You will also find the day
very soon.As said in Geetha,you go on doing your job with sincerity, fame will be at your door.Effort will Pay.Best Wishes.
RMK

























A

Unknown said...

hello sir,hwru,lalitha madam?this poem is really nice.......dhanusha.bob

Unknown said...

hello sir,hwru,lalitha madam?this poem is really nice.......dhanusha.bob

rajagopalan [a] gopu said...

better late than never.
Today only I went through in a leisurely manner and quite enjoyable.
Indeeeeeed very good and I feel you can start posting this to megazines and definitely soon you will be recognized and rewarded.