BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Wednesday, September 19, 2012

Pillaiyaaritam Pulambal--APoem by R Natarajan

   



                     பிள்ளையாரிடம் புலம்பல்


கழுவித் துடைத்த காலைவானம்
      கண்ணை உறுத்தித் தொலைக்கிறதே
தழுவித் தவழும் தென்றல்காற்றும்
      தாளாத் துயரம் விளைக்கிறதே
குழலின் இசையில் கூட இன்று
      குமையும் சோகம் பொழிகிறதே
எழிலும் எரிச்சல் தருகிறதே
      என்ன செய்வேன் கணபதியே !


கன்னம் சிவந்த மாலைவானம்
      கரிய இருட்டில் முகம்மறைக்கும்
வண்ண நிலவும் நிலைமாறி
      வாரி அனலை வீசிடுதே
தின்ன இனிக்கும் பண்டங்கள்
      திகட்டி வெறுப்பை உண்டாக்கும்
என்ன வாழ்க்கை கணபதியே
      இனியும் சும்மா இருப்பாயோ !


போற்றிப் பார்த்தும் நடக்கவில்லை
     புகழ்ந்தும்  எதுவும் கிடைக்கவில்லை
தூற்றிப் பேசத் துணிவில்லை
      துதித்துச் சொல்லிப் பயனில்லை
மாற்றிப் பாடிப் புலம்புகிறேன்
      மனது வைப்பாய் கணபதியே
ஆற்றல் காட்ட மாட்டாயோ
      அழைத்தேன் வர நீ மாட்டாயோ !
   

     
               

0 comments: