ஒரு சுமைதாங்கியின் கதை
சிறுமியாய் வளர்கையிலே --அவள்
செல்வத் தம்பியைச் சுமந்திருந்தாள் .
பிறகு
கோடித் தெருவில் இருந்து
குடம் குடமாய்ச் சுமந்து வந்து
கொதிக்கும் கோடையால்
வறண் ட வாய்களுக்கு
வளைக்கரத்தால் நீர்வார்த்தாள் .
கன்னிப் பருவத்திலே --தன்
கண்களில் கனவுகளையும்
கனத்த நெஞ்சத்தில்
காதல் நினைவுகளையும்
சுமந்து திரிந்தாள் .
மண விழாவிற்குப் பின்பு
மங்கை தன் மணிவயிற்றில்
மழலைச் செல்வத்தைச்
சுமந்து மகிழ்ந்திட்டாள் .
தாயென்ற நிலையினையும்
தன்குடும்பப் பொறுப்பினையும்
தகவோடு சுமந்திட்டாள் .
முதுமை வந்த பின்பும்
முதுகு வளைந்த பின்பும்
பாரம் குறையவில்லை --அவள்
சுமையும் இறங்கவில்லை -தன்
பேரக் குழந்தைகளை உருவாக்கும்
பெருங்கடமை அவள்தலைமேல் .
முடியும் வரை அவள் சுமப்பாள் --வாழ்வின்
முடிவு வரை அவள் சுமப்பாள் --அவள்
சுமப்பது நின்று விட்டால் . . . . . . அது , மற்றவர்
அவளைச் சுமக்கும் நேரம் .
சிறுமியாய் வளர்கையிலே --அவள்
செல்வத் தம்பியைச் சுமந்திருந்தாள் .
பிறகு
கோடித் தெருவில் இருந்து
குடம் குடமாய்ச் சுமந்து வந்து
கொதிக்கும் கோடையால்
வறண் ட வாய்களுக்கு
வளைக்கரத்தால் நீர்வார்த்தாள் .
கன்னிப் பருவத்திலே --தன்
கண்களில் கனவுகளையும்
கனத்த நெஞ்சத்தில்
காதல் நினைவுகளையும்
சுமந்து திரிந்தாள் .
மண விழாவிற்குப் பின்பு
மங்கை தன் மணிவயிற்றில்
மழலைச் செல்வத்தைச்
சுமந்து மகிழ்ந்திட்டாள் .
தாயென்ற நிலையினையும்
தன்குடும்பப் பொறுப்பினையும்
தகவோடு சுமந்திட்டாள் .
முதுமை வந்த பின்பும்
முதுகு வளைந்த பின்பும்
பாரம் குறையவில்லை --அவள்
சுமையும் இறங்கவில்லை -தன்
பேரக் குழந்தைகளை உருவாக்கும்
பெருங்கடமை அவள்தலைமேல் .
முடியும் வரை அவள் சுமப்பாள் --வாழ்வின்
முடிவு வரை அவள் சுமப்பாள் --அவள்
சுமப்பது நின்று விட்டால் . . . . . . அது , மற்றவர்
அவளைச் சுமக்கும் நேரம் .
2 comments:
Last Paragraph Super
RMK
THANK U SIR FOR TRANSLATING YOUR BEAUTIFUL PREVIOUS POEM A CHRONICLE OF A CARRIER.IT SOUNDS TOOOOOOOOOO GOOD IN TAMIL.....IN SENTHAMIZH...REALLY THAMIZHUKU AMUTHENDRU PER......!!!!!!!!
Post a Comment