நாட்டுப் புறப் பாடல் (ஆடித் திங்கள் சிறப்புப் பாடல் )
பூவோட மாலையும் கொண்டாந்து நீ போடு
பாவோட ராகமும் ஒண்ணாகவே பாடு
வேப்ப எல தோரணத்த வீதியில கட்டு
வேகமுடன் தாளத்த உடுக்கையில தட்டு
பொன்னாத்தா பூசையில பொங்கலிடு வோமே
எந்நாளும் காப்பவ கண்ணாத்தா தானே 1
கலையாத கருமேகம் சடையாடும் அம்மாவே
ஒன்னோட பேரச் சொன்னா
நெலையான பெரும்பேரும் நெறைவான திருவாழ்வும்
தன்னாலே வருமே சும்மா
கருநாகம் குடை தந்திடும்
திரிசூலம் ஒளி சிந்திடும்
ஆயிரம் பேர் கொண்டவ ---அவ
ஆயிரம் ஊர் நின்றவ - அவ 2
ஆயிரம் போர் வென்றவ
பொல்லாத நோவும் இல்லாமப் போகும் மாரியம்மா --உன்
கண் பார்வ போதுமடி மாரியம்மா
வின சொல்லாம ஒடிவிடும்
மனப் பொல்லாங்கு மாறிவிடும் --எங்க
வெள்ளாம பெருகிவிடும் --இனி
எல்லாமே நீதானே --அம்மா
எல்லாமே நீதானே 3
பூவோட மாலையும் கொண்டாந்து நீ போடு
பாவோட ராகமும் ஒண்ணாகவே பாடு
வேப்ப எல தோரணத்த வீதியில கட்டு
வேகமுடன் தாளத்த உடுக்கையில தட்டு
பொன்னாத்தா பூசையில பொங்கலிடு வோமே
எந்நாளும் காப்பவ கண்ணாத்தா தானே 1
கலையாத கருமேகம் சடையாடும் அம்மாவே
ஒன்னோட பேரச் சொன்னா
நெலையான பெரும்பேரும் நெறைவான திருவாழ்வும்
தன்னாலே வருமே சும்மா
கருநாகம் குடை தந்திடும்
திரிசூலம் ஒளி சிந்திடும்
ஆயிரம் பேர் கொண்டவ ---அவ
ஆயிரம் ஊர் நின்றவ - அவ 2
ஆயிரம் போர் வென்றவ
பொல்லாத நோவும் இல்லாமப் போகும் மாரியம்மா --உன்
கண் பார்வ போதுமடி மாரியம்மா
வின சொல்லாம ஒடிவிடும்
மனப் பொல்லாங்கு மாறிவிடும் --எங்க
வெள்ளாம பெருகிவிடும் --இனி
எல்லாமே நீதானே --அம்மா
எல்லாமே நீதானே 3
3 comments:
A Good Effort and Beginning.
Cholazhagu,Porulazhagu erandum
kondu,Sernthu pinnappatta Azhagiya
Paamaalai.
Vaazhththukkal.
RMK
a very apt kavithai for adimatham
aadi special...brings back my ssm-dhs memories:)
Post a Comment