இறைவன் அருள்
இறைவாஉன் குரலினிமை கேட்க வேண்டும்
எனவிரும்பி வேண்டிநின்றான் மனிதன் , ஆங்கே
சிறையாரும் குயிலொன்று கூவிற் றம்மா
செவிமடுக்க மாட்டாமல் வாடிப் போனான் .
குறையுடனே அவன்கேட்டான் உன்னைக் காணக்
கூடுமோதான் எனக்கென்று . மேலே வானில்
நிறைஒளியைப் பொழிகின்ற நிலவை நோக்கான் .
நீஎன்னைத் தொடவேண்டும் என்று ரைத்தான் .
அப்போது தோள்மேலே அமர்ந்து கொள்ள
அழகான வண்ணத்துப் பூச்சி ஒன்று
தப்பாமல் வருவதையே பார்த்து விட்டுத்
தட்டியதை விட்டுவிட்டுக் கூவிக் கூவி
ஒப்பாரி வைத்திட்டான் . இறைவன் சொன்னான்
உன்எண்ணம் போல்அருள்தான் வருவ துண்டோ ?
எப்போதும் அருள்செய்வேன் , புரிந்து கொள்ள
இயலாமல் வருந்தாதே , உணர்வாய் உண்மை !
(Adapted from a story published in "THE VISION"-A monthly magazine of Anadashram ,Kanhangad, Kerala,-March 2014 issue)
இறைவாஉன் குரலினிமை கேட்க வேண்டும்
எனவிரும்பி வேண்டிநின்றான் மனிதன் , ஆங்கே
சிறையாரும் குயிலொன்று கூவிற் றம்மா
செவிமடுக்க மாட்டாமல் வாடிப் போனான் .
குறையுடனே அவன்கேட்டான் உன்னைக் காணக்
கூடுமோதான் எனக்கென்று . மேலே வானில்
நிறைஒளியைப் பொழிகின்ற நிலவை நோக்கான் .
நீஎன்னைத் தொடவேண்டும் என்று ரைத்தான் .
அப்போது தோள்மேலே அமர்ந்து கொள்ள
அழகான வண்ணத்துப் பூச்சி ஒன்று
தப்பாமல் வருவதையே பார்த்து விட்டுத்
தட்டியதை விட்டுவிட்டுக் கூவிக் கூவி
ஒப்பாரி வைத்திட்டான் . இறைவன் சொன்னான்
உன்எண்ணம் போல்அருள்தான் வருவ துண்டோ ?
எப்போதும் அருள்செய்வேன் , புரிந்து கொள்ள
இயலாமல் வருந்தாதே , உணர்வாய் உண்மை !
(Adapted from a story published in "THE VISION"-A monthly magazine of Anadashram ,Kanhangad, Kerala,-March 2014 issue)
0 comments:
Post a Comment