(பிரபோ கணபதி என்ற மெட்டு )
புகழ் பாடுவோம்---கண
பதியினைத் துணையாய் நாடுவோம் !
(புகழ்...)
காக்கும் கணபதியைக் காலையும் மாலையும்
கருத்துடன் பணிந்திடு வோமே
வாக்கும் சிறந்திடும் வல்லமை பிறந்திடும்
வாழ்வினில் உயர்ந்திடு வோமே !
(புகழ் ...)
தொடுத்த மாலையைத் தூயவன் பதத்தில்
சூட்டியே மகிழ்ந்திடு வோமே
எடுத்த செயல்களில் மாபெரும் வெற்றி
எளிதினில் அடைந்திட லாமே !
(புகழ்...)
நைந்து வருந்தியே வாடிடும் போதினில்
நாயகன் கணபதி சரண்புகு வோம்
ஐந்து கரத்தினன் அவனரு ளாலே
அத்தனை துயர்களும் போகும் !
(புகழ்.....)
1 comments:
Anna, Nice bhajan
Sai
Post a Comment