'தாயிற் சிறந்த கோயிலும் இல்லை ,காயத்ரியை விடச் சிறந்த மந்திரமும் இல்லை' என்று சொல்வார்கள் .
காயத்ரியை 'வேத மாதா' என்றே குறிப்பிடுவர்.
காயத்ரி மந்திரத்தை முறைப்படி ஓதி (ஜபித்து) வந்தால் கல்வியறிவு, செல்வம், மன அமைதி ,தெளிவான சிந்தை போன்ற பல பலன்கள் உண்டாகும்.
வடமொழியில் அமைந்துள்ள இந்த ஒப்பற்ற மந்திரத்திற்கு அற்புதமான தமிழ்வடிவம் தந்திருக்கிறார் ஒரு மாபெரும் கவிஞர் . அவர்---பாரதியார்.!
பாரதியாரின் முப்பெரும் பாடல்களில் ஒன்றான 'பாஞ்சாலி சபத'த்தில் காயத்ரி மந்திரத்தின் தமிழ் வடிவம் இடம் பெற்றுள்ளது .
துரியோதனனின் வஞ்சக அழைப்பை ஏற்றுப் பாண்டவர் ஐவரும் பாஞ்சாலியுடன் அத்தினபுரத்திற்குப் பயணம் செய்கின்றனர் . மாலைப் பொழுது வந்ததும் ,பாண்டவர்களும் அவர்தம் படையினரும் வழியில் ஒரு சோலையில் தங்கி இளைப்பாறுகின்றனர் .
அப்போது அர்ச்சுனன் பாஞ்சாலியைத் தனியே அழைத்துப் போய் மாலைக் கதிரவனின் அழகினைக் காட்டுகிறான்
.
.
அர்ச்சுனனின் வாய்மொழியாக வரும் நெஞ்சை அள்ளும் நிகரில்லா வருணனை வரிகளுக்குப் பின்னர் மகாகவி ,
"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் --அவன்
எங்களறிவினைத் தூண்டி நடத்துக "
என்று காயத்ரி மந்திரத்தின் தமிழ் வடிவத்தைப் பொருத்தமாக அமைக்கின்றார் .
வடமொழி மந்திரத்தின் சொல்விச்சும் ,கருத்தாழமும் தமிழ் வடிவத்திலும் காணப்படுவது எண்ணி மகிழத்தக்கதாகும் !
1 comments:
good. hope, an in depth analysis will follow soon.
LR
Post a Comment