நூறு மதிப்பெண் !!!
இயல்பாய், எளிதாய் மகிழ்ச்சி வருமே
எவரும் பெறலாம், இன்பம் உறலாம் !
அயலார் விடவும் அதிகம் வேண்டும்
ஆசை அதற்குக் குழியைத் தோண்டும் !
ஒன்றைப் பலரும் பகிர்ந்தால் குறையும் .
உடனே உதிக்கும் அவருள் பிணக்கே !
என்றும் மகிழ்ச்சி பகிர்ந்தால் பெருகும் !
இதுவே வாழ்வின் விந்தைக் கணக்கு !
துண்டு தோளில் கிடக்கும் போது
சுற்றி முற்றும் தேடும் நண்பா !
மண்டும் மகிழ்ச்சி மனதில் பொங்க
மாய உலகில் தேடல் பண்பா ?
அன்பைக் கூட்டி அறிவைப் பெருக்கி
ஆணவம் கழித்துப் பகிர்வாய் மகிழ்ச்சி !
இன்பம் ஈவாய்த தரும்இக் கணக்கே !
என்றும் நூறு மதிப்பெண் உனக்கே !
இனிய புத்தாண்டு ௨௦0௧௧ இல் (2011) உலகில் மகிழ்ச்சி பெருக வேண்டும் என இறைவனை வேண்டி இப்பாடலை உலக மக்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்
Sunday, December 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment