BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, September 8, 2013

"நீ ..."-வாழ்க்கைத் தத்துவப் பாடல் --By R.Natarajan

                                                   "    நீ  "


                  திடமெனக் காணும் பொருளவை  யாவும்    
                               திடுமெனக் கனவென மறையும் 

                 நடந்திடும் செயல்கள் நகர்ந்திடும் வாழ்வில் 

                                நடந்தவை ஆகியே  கரையும் 

                 புடமிடு பொன்னாய்  நிலைத்திடும் உண்மை 

                               புவியினில் "நீ" என   உணர்ந்தால் 

                இடம்இடம்  ஆக  நிழலினைத் தேடி 
                            இருட்டினில் அலைந்திடல்  குறையும் !  


                      
                  
        

                  

Sunday, September 1, 2013

மெரினா வெண்பா --By R.Natarajan.






                                             மெரினா  வெண்பா


                        சூடான சுண்டல் சுகமாய்க் கடற்காற்று

                       தேடாமல் வந்திடும் தெய்வவரம் ---கோடானு

                       கோடி  அலைகள்  குதிக்கும்  மெரினாவை

                       நாடியே  சென்றிடுவோம்  நாம் !


(31-08-2013--நேற்று மாலை   மகளுடனும் ,மனைவியுடனும் மெரினா சென்றிருந்தேன் . அதன் விளைவு ---இந்த வெண்பா )

Tuesday, August 27, 2013

THY GRACE I WANT--a poem on Lord Krishna-By R.Natarajan

                                                         THY GRACE I WANT



                                               Rain bearing dark cloud Ye resemble
                                               Peacocks dance around in ensemble.
                                               Music from Thy flute floats on airy ways
                                               Entranced cows forget even to graze.
                                               Hearts of Gopis ,hearing Thy name soon
                                               Melt down like the soft butter they churn.
                                              Alas, my heart alone fails to chant
                                              Thy holy name. Krishna--Thy grace I want!

                (This is is a translation of my song on Lord Krishna in Tamil ,written some time ago.  )

Sunday, July 21, 2013

CUP OF JOY--A Poem by R.Natarajan

                                               cup of joy

                     ( I wrote this poem just now to mark my 60th birthday-21-07-2013)

Enjoy,enjoy life's cup of joy
Don't be sullen,don't sulk or be coy.

Watch the hues on the heavenly canvass
That merge, submerge and then emerge as
A new, fresh and enchanting design
On ev'ry daybreak and evening divine.

Bewitching beauty,that's Nature's bounty
Beckons you -revel in God's aplenty.

Hear the music serene and  sweet
Which is ecstasy's highest seat,
As one raga softly and subtly slide
Into another on a harmonious tide.

Swallows, parrots and nightingales
Regale you with life's happy tales.

Human soul is gentle in its core--
Feel it,share it --grieve no more!


Tuesday, June 25, 2013

விடுமாற்றமும் ,நிலைமாற்றமும் (இலக்கியத் துளி) ----By R.Natarajan

                                            விடுமாற்றமும் ,நிலைமாற்றமும் 


அது ஒரு பெரிய அரண்மனை ---ஓங்கி உயர்ந்த மாடங்களைக் கொண்டது .பகைவர் பலரை வென்று வாகை  சூடிய மாபெரும் வீரனான அரசன் ஒருவன் தன் குடும்பத்தினருடன் அரண்மனை மேன்மாடத்தில் வசித்து வந்தான் .வெற்றிக் களிப்பும் ,செல்வச் செழிப்பும் ,ஆட்சிச் சிறப்பும் நிறைந்த அந்த இடத்தில் கேளிக்கைகளுக்கும் ,கொண்டாட்டங்களுக்கும் குறைவே இல்லை .எப்படிப்பட்ட சுகபோக வாழ்க்கை !

ஆனால் ....இதெல்லாம் இப்போது பழைய கதை .உல்லாசமும் ,கோலாகலமும்  உலா வந்த அந்த உயர் மாடத்தில் இன்று யாரும் இல்லை .அதாவது மனிதர்கள் யாரும் இல்லை .மனித நடமாட்டமே இல்லாத அந்த அரண்மனையின் மேன்மாடத்தில் பேய்களும் ,கோட்டான்களும் குடியேறி விட்டன .

இந்த  அவல நிலைக்குக் காரணம் என்ன தெரியுமா ?

தென்னவனாகிய பாண்டியன் சொல்லி அனுப்பிய சொல்லுக்கு அந்த அரசன் அடிபணிய மறுத்தான் .அவன் அனுப்பிய ஓலையை ஏற்காமல் புறக்கணித்தான் ,சீற்றம் கொண்ட பாண்டியன் செரு முனையில் அவனைக் கொன்று ,அவனைச் சேர்ந்தோரையும்  அடியோடு அழித்தொழித்தான் . அதனால் இப்போது அவ்வரசனின் அரண்மனை மாடத்தில் பேய்கள் குடியிருக்கின்றன ; கோட்டான்கள் கூக்குரல் இடுகின்றன .

போர்க்களத்தில்   வயிறு முட்டப் பிணம் தின்றதால்  தூக்கம்  வராமல் படுத்துப் புரண்டுக் கொண்டிருக்கும் பேய்களை  உறங்க வைக்கக் கோட்டான்கள் தாலாட்டுப் பாடுவதைப் போன்றல்லவோ இது   தோன்றுகிறது !
அரச குடியினர் வாழ்ந்த இடத்தில் இப்போது பேய்கள்  ஓய்வெடுக்கின்றன ..மகிழ்ச்சி ஆரவாரம் கேட்ட இடத்தில்  கோட்டான்கள் அலறுகின்றன .தென்னன் விடுமாற்றம் (அனுப்பிய ஓலையை ) கொள்ளாததால் இந்த நிலைமாற்றம் !

அந்தோ ! இரக்கத்தால் நெஞ்சம் நெகிழ்கிறது !  ஆனால் ,பாடலின் சொல்லழகாலும் ,பொருளழகாலும்  நெஞ்சம் மகிழ்கிறது ! நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும்  ஒருசேர விளைவிக்கும்  நிகரில்லா முத்தொள்ளாயிரப் பாடல் இதோ :

              "  வாகை வனமாலை சூடி அரசுறையும்
                 ஓகை  உயர் மாடத் துள்ளிருந்து ----கூகை
                 படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே  தென்னன்
                 விடுமாற்றம் கொள்ளாதார் நாடு !  "      

Monday, June 24, 2013

யாது நீ எழுதவில்லை --A tribute to Kannadasan-By R.Natarajan

                                                   யாது நீ  எழுதவில்லை ?


கண்ணனின்  தாசன்  தானோ !
             கவிதையின் நேசன்  தானோ !
மண்ணிலே உள்ள யாவும்
              வார்த்தையில் கொண்டு வந்தாய் !
விண்ணிலே  தேவர்  பாட
         வியத்தகு மெட்டில் நல்ல
பண்ணிலே பலவாம் பாடல்
          படைக்கவோ சென்றாய் கூறு ?  



காதலும் இருக்கும்  காந்தக்
               கவிதையும் இருக்கும் , எண்ண
மோதலும் இருக்கும் ,நெஞ்சம்
              முழுவதும் நிறைந்து  நிற்கும்
தாதவிழ் பூவைப்  போன்று
             தத்துவ மணம்சி றக்கும்  .
யாதுநீ  எழுத வில்லை ?
           இன்றமிழ்ப்  பெற்ற பிள்ளை !  

காளமேகம் கவித்திறன்

                                                       செருப்பும் விளக்குமாறும் 

                        (விகடன் 2005 தீபாவளி மலரில் வெளிவந்த என் கட்டுரை )
\

பொறாமை என்பது புலவர்களின் பூர்விகச் சொத்து என்று சொல்வதுண்டு இதனால் ஒரு நன்மையும் உண்டு .போட்டியில் தான் பல அற்புதமான பாடல்கள் படைக்கப்படுகின்றன

காளமேகப் புலவருக்கும் திருமலைராயனின் அரசவைப் புலவர்களுக்கும் ஏற்பட்ட போட்டியில் , தமிழ் இலக்கியத்துக்குப் பல வேடிக்கையான ,மாறுபட்ட  பாடல்கள் கிடைத்துள்ளன .

அரசவைப் புலவர்கள் வேண்டுமென்றே கொடுத்த விபரீதமான குறிப்புகளுக்குத் தக்கவாறு ,யாவரும் வியக்குமாறு பாடினார் காளமேகம் .

ஒரு புலவர் "செருப்பு " எனத் தொடங்கி , " விளக்குமாறு " என்று முடியும் வகையில் வெண்பா ஒன்றைப் பாடுமாறு சொன்னார் . விடுவாரா காளமேகம் ?
'
"செருப்புக்கு " என்பதை 'செரு + புக்கு '( 'போர்க்களம்  புகுந்து  ') என்றும் ,'விளக்குமாறு ' என்பதை  'விளக்கும் + ஆறு '( 'விளக்கமாகச் சொல்லும் வழி) என்றும் அமைத்து அசத்தி விட்டார் .

" செருப்புக்கு வீரரைச் சென்றுஉழக்கும்  வேலன் 
பொருப்புக்கு நாயகனைப் புல்ல --மருப்புக்கு
தண்தேன்  பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும் 
வண்டே  விளக்கு மாறே !" 

'போரில் எதிரிப்படை  வீரர்களைத் துன்பப்படுத்தும் , மலைக்குத் தலைவனான வேலேந்திய முருகனை நான் அடைய , தாமரையில்  இருக்கும் வண்டே .... நீ  வழி காட்டு ' என்று தலைவியின் கூற்றாக அமைந்த அழகிய பாடல் இது !