தெய்வமாய் விளங்குகின்றாய்
விடிந்திடும் போதே என்னை
விளித்திடும் குரல்தான் எங்கே ?
கடிந்திடும் போதும் காட்டும்
கண்களின் கருணை எங்கே ?
படிந்திடும் பாசத் தாலே
பற்றிடும் கரங்கள் எங்கே ?
இடிந்திடும் உள்ளத் தோனை
இயக்கிடும் திறன்தான் எங்கே ?
கனவெனக் கலைந்து சென்றாய்
காலத்தைக் கடந்து வென்றாய்
நினைவிலே உறைந்த ஒன்றாய்
நெஞ்சிலே நிறைந்து நின்றாய்
புனலிலே கரைத்த போதும்
புலன்களில் புகுந்து கொண்டு
தினம் தினம் எங்கள் வாழ்வில்
தெய்வமாய் விளங்கு கின்றாய்
0 comments:
Post a Comment