வாழ்வின் வண்ணமே !
பொழுது புலர்ந்ததது ,பூவும் மலர்ந்தது
புள்ளும் துணையுடன் பாடிப் பறந்தது
தொழுது போற்றுவோம் தொடங்கும் ஆண்டினை ,
தூய எண்ணமே வாழ்வின் வண்ணமே !
தேனைச் சுவைத்திடத் தும்பி பறக்குது
தென்றல் மலர்மணம் கொண்டு சிறக்குது
வானும் வெளுக்குது ,வருடம் பிறக்குது
வாழ்ந்து காட்டுவோம் ,வாரும் பாருளீ ர்
கோவில் மணியொலி காற்றில் கேட்குது
கூறும் மறையொலி சேர்ந்து கொண்டது
சேவல் கூரையில் ஏறிக் கூவுது
சிறந்த தொடக்கமே வெற்றி ஆவது