நில்லாது பொருளனைத்தும் , நிலையாது சுகமனைத்தும் .
எல்லாமும் எனதென்றே இருப்பதுவும் தவறன்றோ
பொல்லாத உளமேஇப் புவிவாழ்க்கை முடியுமுன்னே
கல்லாலின் கீழமர்ந்தான் கழலிணையைத் தொழுதுய்வாய் !
உய்யுமொரு வழிதேடி உளைகின்ற உளத்தவரே
வெய்யதாக வரும்பிறவி வெள்ளத்தைக் கடந்திடவே
செய்யுமொரு புணையுண்டு--தெளிந்திடுவீர் புணையதுதான்
ஐயனவன் கல்லாலின் அடியமர்ந்தான் அடியிணையே !
அடியேனுன் அருள்விரும்பி அன்புடனே அழைக்கின்றேன்
துடியேயாம் இடைஉமையின் துணைவாநீ துயர்துடைப்பாய்
முடியேறிப் புனல்மங்கை மொய்க்கின்ற பெருமானே
முடிவேதும் இல்லாத முழுஞானச் சுடரொளியே !
1 comments:
அற்புதம் !
ஒரு தாம்பரம் மொட்டு கிரோம்பேட்டையில் மலர்கின்றது.
Post a Comment