" கொடுப்பதே மகிழ்ச்சி "
'கொடுப்பதில் மகிழ்வடையும் வாரம்' பள்ளிகளில் கொண்டாடப் பட வேண்டும் என்ற பள்ளிக்கல்வித் துறையின் உத்தரவு பற்றிய செய்தி (தினமணி -29 செப் ) மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது .
குறுகிய நோக்கமும் ,தன்னலப் போக்கும் ,அனைத்தையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற பேராசையும் பெருகியுள்ள இந்நாளில் இப்படிப்பட்ட ஒரு புதிய அணுகுமுறை பற்றிப் படித்த உடனே உள்ளம் துள்ளிக் களித்தது . அந்தக் களிப்பிலே கனிந்த ஒரு கவிதையைப் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன் :
ஆறளிக்கும் தண்புனலை ; விண்ணில் தோன்றும்
ஆதவனும் ஒளியோடு தருவான் வெப்பம் .
சேறளிக்கும் தாமரைப்பூ ; மரங்கள் யாவும்
தித்திக்கும் கனிதந்து நிழல் கொடுக்கும்
மாறிலாது மழையளிக்கும் முகிலின் கூட்டம் ;
வள்ளல்பசு பால்சுரக்கும் . இயற்கை அன்னை
ஈறிலாது வழங்குகின்ற கொடையே வாழ்க்கை !
ஈத்துவக்கும் இன்பத்தைப் பெறுவோம் நாமும் !
0 comments:
Post a Comment