கொசு
கிட்டவந்து கிட்டவந்து
கெட்ட கொசு கடிக்கும் -அது
கீழும் மேலும் பறந்துவந்து
குருதியினைக் குடிக்கும் !
எட்டுப்பக்கம் மருந்தடித்தும்
எதும்பயன் இல்லை --அதுவோ
எங்கிருந்தோ பாய்ந்துவரும்
இழைத்திடுமே தொல்லை !
திட்டமிட்டு வலைபுகுந்தால்
திருட்டுக்கொசு ஒன்று --வலைக்குள்
சிரித்தபடிக் காத்திருக்கும்
இரைகிடைத்த தென்று !
வெட்டவொரு கத்தியில்லை
வெடிமருந்தும் வீணே -கொசுவை
வேருடனே அழிப்பதற்கு
வழியொன்றும் காணேன் !!!
2 comments:
Funny Poem
திட்டமிட்டு வலைபுகுந்தால்
திருட்டுக்கொசு ஒன்று வலைக்குள் சிரித்தபடிக் காத்திருக்கும் இரைகிடைத்த தென்று -romba nadraaga irukiradhu
Dhanusha
Funny Poem
திட்டமிட்டு வலைபுகுந்தால்
திருட்டுக்கொசு ஒன்று வலைக்குள் சிரித்தபடிக் காத்திருக்கும் இரைகிடைத்த தென்று -romba nadraaga irukiradhu
Dhanusha
Post a Comment