" நீ "
திடமெனக் காணும் பொருளவை யாவும்
திடுமெனக் கனவென மறையும்
நடந்திடும் செயல்கள் நகர்ந்திடும் வாழ்வில்
நடந்தவை ஆகியே கரையும்
புடமிடு பொன்னாய் நிலைத்திடும் உண்மை
புவியினில் "நீ" என உணர்ந்தால்
இடம்இடம் ஆக நிழலினைத் தேடி
இருட்டினில் அலைந்திடல் குறையும் !
1 comments:
Nalla thathuva paadal...........dhanusha
Post a Comment