BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Monday, June 24, 2013

யாது நீ எழுதவில்லை --A tribute to Kannadasan-By R.Natarajan

                                                   யாது நீ  எழுதவில்லை ?


கண்ணனின்  தாசன்  தானோ !
             கவிதையின் நேசன்  தானோ !
மண்ணிலே உள்ள யாவும்
              வார்த்தையில் கொண்டு வந்தாய் !
விண்ணிலே  தேவர்  பாட
         வியத்தகு மெட்டில் நல்ல
பண்ணிலே பலவாம் பாடல்
          படைக்கவோ சென்றாய் கூறு ?  



காதலும் இருக்கும்  காந்தக்
               கவிதையும் இருக்கும் , எண்ண
மோதலும் இருக்கும் ,நெஞ்சம்
              முழுவதும் நிறைந்து  நிற்கும்
தாதவிழ் பூவைப்  போன்று
             தத்துவ மணம்சி றக்கும்  .
யாதுநீ  எழுத வில்லை ?
           இன்றமிழ்ப்  பெற்ற பிள்ளை !  

3 comments:

RMK said...


I consider Kannadasan next to Bharathiyar.He is a born poet.
your kavithai about Kavingar is
superb.He is a divine Kavingar.
Best wishes.Keep on going

RMK

GAYATHRI said...

Kannadasan is perhaps a neuro surgeon who has cut open everyones brains!! So practical his writings are! A good kavidhai for Kaviyarasar!!

Unknown said...

காதலும் இருக்கும் காந்தக்
கவிதையும் இருக்கும் ,
எண்ண மோதலும் இருக்கும் ,
நெஞ்சம் முழுவதும் நிறைந்து நிற்கும் these lines are very true......!!!!! Dhanusha