உயர்நிலை கூடுவோம்
பொலம்புனை நலம்திகழ் வலம்படு திருமகள்
புவியினில் பொருளொடு புகழையும் தருமகள்
இலம்இலம் எனுமொழி இவள்வரின் இல்லையே
எவைஎவை நல்லவை அவைவரும் ஒல்லையே
குறுமுகை நகையவள் முகம்தனில் மின்னுமே
குணம் மிகும்,திறம் வரும்,மகிழ்ச்சியும் நண்ணுமே
அறுசுவை உணவுடன் அணிமணி யாவையும்
அளித்திடும் அலைமகள் கடைக்கணின் பார்வையே
எண்வகை ஆயின செல்வமும் குவிந்திடும்
ஏழ்மையும்,துன்பமும் ,கவலையும் அவிந்திடும்
பண்வகை நல்லிசைப் பாடலைப் பாடுவோம்
பண்புடன்,பணிவுடன் உயர்நிலை கூடுவோம்
0 comments:
Post a Comment